சனி, 18 ஜூலை, 2009

கோலம்

இது பல நாட்களாக டிவியில் வரும் சீரியல் பற்றி அல்ல.
நாம் தினமும் செய்யும் சிறிய ஒரு பழக்கம் தான் .
கோலம் பற்றி மட்டும் அல்ல இன்னும் நாம் அன்றாடம் செய்து வரும் பல routine
களுக்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா.

ஏனென்றால் நிறைய விஷயங்கள் நம் அம்மா நமக்கும் ,அம்மாவிற்கு பாட்டியிடமிருந்தும் சொன்னவை or செய்தவை.

முன் சொன்னது போல் காலையில் வாசல் தெளித்து கோலம் போடுவதிலிருந்து
விளக்கு ஏற்றுவது வரை எல்லாவற்றிற்கும் ஒரு reason உள்ளது எனக்கு தெரிந்தவரை!

காலையில் வாசல் தெளித்து கோலம் போடுவதை லக்ஷ்மி கடாக்ஷம் என்று ஒரு வகையில் சொல்லலாம்.
இன்னொரு வகையில்,
பாட்டிகாலத்திலோ அதற்கு முன்போ மின்சார வசதிகள் இன்றளவு இல்லை.
அதிகாலையில் எழுந்து வீட்டில் வேலைகள் செய்யும் பழக்கம் இருந்திருக்கும்.
அதோடு அந்நாட்களில் பொதுவாக அனைவரும் கிராமங்களில் ஆற்றில் நீராடுவதும் உண்டு.
so
ஆற்றுக்கு செல்வதற்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
இருள் சூழ்ந்த அதிகாலையில் வாசலில் விளக்குமாரில் பெருக்கும்போது reptiles
வகையறாக்கள் ஏதும் வாசலில் ரெஸ்ட் எடுத்துகொண்டிருந்தால் எழுப்பி விரட்டிவிட்டு அவற்றின் ஆபத்தில் இருந்து காப்பற்றிக்கொள்ள முடியும்.

பின்பு சாணம் சேர்த்த தண்ணிரில் வாசல் தெளிப்பார்கள் ஏனென்றால் சாணம் ஒரு நேச்சுரல் கிருமி நாசினி .
அது மேல் சொன்ன வகையறாக்களை வீட்டுக்கு உள்ளே செல்லாமல் தடுக்கும்.
அதன் பின் கோலம் ( அப்பாடா ஒரு வழியாக டைட்டில் வந்துவிட்டது !)போடுவது.
அரிசி மாவில் கோலம் போடுவது எறும்பு போன்ற சிறிய ஜீவராசிகளுக்கு உணவு இடுவதற்காக. (உள்ளே வந்து சர்க்கரை டப்பாவில் குடியேறாமல் தடுக்க )
பெண்கள் எப்போதுமே creative
கோலம் போடுவதில் கூட அப்படித்தான்.
எவ்வளவு பெரிய கோலங்கள் (எனக்கு நினைவு தெரிந்து நானே பெரிய கோலங்கள் ட்ரை செய்திருக்கிறேன்.)
inspiring
ஆனால் இன்று?
சூரியன் வந்து சுள்ளென்று அடி வைத்த பின்னால் தான் நமக்கு பள்ளியெழுச்சி .
வசிக்கும் அடுக்கு மாடியில் நம் வீட்டு ஒரு சதுர அடி வாசலில் கடமைக்கு ஒரு கோலம் அல்லது ஒரு ஸ்டிக்கர் .
கோலமாவு அரிசி மாவா ? தெரியவில்லை.
நம் பெரியவர்கள் செய்த சிறிய செயலுக்கும் ஒரு அழகான நன்மை இருந்தது .

இன்று நாம் அதை பின்பற்றுவதில் அதன் உண்மையான காரணங்கள் ஏதும் இல்லை.

வழிவழியாக செய்து வரும் வெறும் பழக்கமாகவே ஆகிவிட்டது.

வேண்டுமானால் லக்ஷ்மி நம் வீட்டுக்கு வருவாள் என்ற ஆசை காரணமாக இருக்கலாம்.

இது ஏன் பார்வையில் தோன்றிய எண்ணங்களே .

உண்மையான காரணம் வேறு எதாவது இருக்குமானால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

வெள்ளி, 26 ஜூன், 2009

முதல் முயற்சி

இதோ விழுந்து விட்டேன் வலையில் !


வலைப்பதிவு துவங்கும் எனது பேராசையை சொல்கிறேன்.
துவங்கி விட்டேன்.

என்ன எழுதுவது?

எதில் துவங்குவது?

எதை பற்றி?

?????????

இதை யோசனை செய்தே எவ்வளவு தூரம் எழுதிவிட்டேனா?

அட!

பிள்ளையார் சுழியாக எது அமையும்?
பிள்ளையார் பற்றியா?
அது பற்றி எழுத என் அண்ணனிடம் தான் கேட்க வேண்டும் .

இந்த வலைப்பதிவு துவங்க அவனே என் inspiration
அவனுக்கு பிள்ளையார் தான் சகலமும்.
எழுதுவது விட என் எண்ணங்களை பதியவே விரும்புகிறேன்.

ஆனால் எது பற்றிய எனது எண்ணங்களை பதிக்கும் முன் அது பற்றிய பல்வேறு கோணங்களை நான் ஆராய கற்றுக்கொள்ள வேண்டும் .
நிறைய வேலை இருக்கும் போலிருக்கிறது.
இந்த எண்ணங்கள் அனைத்தும் தோன்றிய பொது மணி இரவு பன்னிரண்டு.
இது கனவா இல்லை விழித்துக்கொண்டு தான் சிந்திக்கிறேனா?


இரவு மணி 12!
இது எல்லாம் கனவா இல்லை விழித்துக்கொண்டு இருக்கிறேனா?

எல்லாம் கனவு போல்தான் நிஜமாகவே ஆகி விட்டது என் வலைப்பதிவு ஆசை.